முடிவல்ல துவக்கம்
நல்ல விதைகள் எப்போதுமே
பயன் தராமல் போவதில்லை,
இயேசுவின் மரணம்
புதைப்பல்ல,
விதைப்பு.
மனுக்குலத்தின் மீட்பு
மண்ணுக்குள் மரணிக்குமா ?
இல்லை
அது தரயில் பயணிக்கும்.
சதிகளின் சட்டங்கள்
உடலை வருத்தின,
நீதியின் தேவன்
புது உயிரை வருத்தினார்.
நிரந்தர மீட்பைத்
மக்களுக்குத் தரவே
மீட்பரின் உயிர்ப்பு வரமானது.
வரலாறுகள் எல்லாம்
நரை முடி தடவ,
புது வரலாறு ஒன்று
புதிதாய் இதோ இங்கே
நிகழ்ந்தது.
இது,
ஏழைகளுக்காய் விழுந்த
தங்கத் துண்டு,
மக்கள் தொண்டு
கொண்டு
வாழ்வை வென்றவரின்
ஓர்
இறவாக் காவியம் இது.
இயேசு,
மனிதராய் வந்ததால்
மனுமகனானவரல்ல,
மனுமகனாகியதால்
மனிதனாய் வந்தவர்.
எனவே
சாவு அவருக்கு
சாய்வு நாற்காலி.
சாவு அவருக்கு இன்னொரு ஓய்வு,
மரணம் அவருக்கு
விசுவாச ஊழியன்.
இதோ,
இந்த மகத்துவ சகாப்தம்
இங்கே முற்றுப் பெறவில்லை…
ஆரம்பமாகிறது.
இது
மண்ணில் விழுந்து
மனதில் முளைக்கும் விதை.
கேட்கச் செவியுள்ளவன்
கேட்கட்டும்.
விசுவசியுங்கள்,
நம்பிக்கையில்லாமல் செய்யும்
செயல்கள் எல்லாம்
நடுக்கடலில் விழுந்த
துடுப்பிழந்த படகு தான்.
விசுவசியுங்கள்
வாழ்வடைவீர்கள்
நம்புங்கள் மீட்படைவீர்கள்.


விசுவசியுங்கள்
வாழ்வடைவீர்கள்
நம்புங்கள் மீட்படைவீர்கள்.
Good words thanks xavier!
மிக்க நன்றி !
//விசுவசியுங்கள் வாழ்வடைவீர்கள்
நம்புங்கள் மீட்படைவீர்கள்.//
இவ்வளவு நாளும் இப்பதிவு என் கண்களுக்குத் தென்படாமல் இருந்துவிட்டதே!…. இன்றைய நாளுக்காய் இறைவனுக்கு நன்றி!….
ஒரு மரணம் விதைப்பானால் அது மீண்டும் உயிர்பெற வேண்டும்….
யேசுவின் மரணம் விதைப்பானதால்தான் அவர் மீண்டும் உயிருடன் எழுந்தார்…..
எல்லாப் புகளும் மாட்சிமையும் அவர் ஒருவருக்கே!
(“விதைக்கப்பட்ட விதையிலிருந்து தான்” புதிய மரமோ செடியோ உயிர்பெற்று முளைத்திட வேண்டும்….. ஆனால் இப்போதெல்லாம் இந்த பைபிள் வசனத்தைத் தமக்கேற்ற விதங்களில் பயன்படுத்துவோரைப் பார்க்கும்போது கவலையாகத்தான் இருக்கிறது….விதைக்கப்படுவது ஒரு விதையாகவும்…உயிர்ப்பது வேறு மரமாகவும் இருப்பது எவ்வாறு???)
ஆனால் புதைக்கப்பட்ட விதையாகி,
பின் உயிர் பெற்றெழுந்தவர் இறைமகன் ஒருவரே!
நாமும் எம் பாவங்களுக்காய் இறந்து (விதையாகி) இறைமகனில் உயிர் (புத்துயிர்) பெறுவோம்!…..
நன்றி சேவியர்!…தொடரட்டும் உங்கள் இறைப்பணி!…. வாழ்த்துகள்!
அழகான பின்னூட்டத்துக்கு நன்றி ஷாமா…
nice
நன்றி மரிய லூயிஸ்
தொடரட்டும் உங்கள் இறைப்பணி!….
புதிய பதிவுகளுக்காக காத்திருக்கிறோம்.
வாழ்த்துக்கள்!
Welcome